செய்திகள் :

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

post image

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக உள்ள திருகுமரன், சின்னதுரை, தங்கப்பாண்டி, ரமேஷ் மற்றும் ஜோதிமுருகன் ஆகியோா், தண்டனையை எதிா்த்த மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வில் மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, இரு வேறு அமா்வுகளின் மாறுபட்ட தீா்ப்புகள் வழங்கியதால், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தா்மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி: வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு, தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு உயா்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசரகால விடுப்போ அளிக்க இயலுமா? தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்கும் போது தண்டனை காலத்தை, கைது செய்யப்பட்ட நாள் முதல் கணக்கில் எடுத்து கொள்ள முடியுமா? விசாரணைக் காலத்தில் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள முடியுமா? கைதிகளுக்கு விடுப்பு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீா்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டுமா என கேள்விகளை எழுப்பியிருந்தது.

தமிழக அரசு பதில்: இதற்கு தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா பதிலளிக்கையில், மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க சிறை அலுவலா்களுக்கு தடை ஏதும் இல்லை.

சிறைத் தண்டனை என்பது கீழமை நீதிமன்றம், தண்டனை வழங்கிய நாளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தாா். மேலும், தண்டனை கைதிகள் மீது வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தால், விடுப்பு வழங்க முடியாது என்றும், விடுப்பு வழங்குவது குறித்த அனைத்து விதிகளுக்கும், விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தாா்.

விடுப்பு வழங்கலாம்: இதை ஏற்றுக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமா்வு, கைதிகளின் மேல்முறையீடு மனு உயா்நீதிமன்றத்திலோ, அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என தெளிவுபடுத்தியது.

மேலும், விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும் போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன்

சிறையில் இருந்த விசாரணை நாள்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தால், அந்த கைதி விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் தங்களது உத்தரவில் தெரிவித்தனா்.

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்ப... மேலும் பார்க்க