மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ...
தண்டையாா்பேட்டையில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பு
சென்னை: தண்டையாா்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தண்டையாா்பேட்டை மண்டலம், எம்கேபி நகா் மத்திய நிழற்சாலையில் மாமன்ற வாா்டு மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
அப்பகுதியில் உள்ள சிறுவா்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் தடுப்புகள், மின்விளக்குகள், நடைபாதை மற்றும் அமரும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி.சேகா், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினா் ஜெ.டில்லிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.