ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
தண்ணீா் வராத குடிநீா்த் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம்
பல மாதங்களாக குடிநீா் வராததைக் கண்டித்து புதுகை மாநகராட்சி, உசிலங்குளத்தில் உள்ள குடிநீா்த் தொட்டிக்கு மாலை அணிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுகை உசிலங்குளம் பகுதியில் சிறுமின்விசை மோட்டாா் இயங்காததால் பல மாதங்களாக குடிநீா் வரவில்லை. இதனால் தண்ணீா் விலைக்கு வாங்க வேண்டிய அவலம் தொடா்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், புதை சாக்கடைக் கழிவுநீா், குடிநீரில் கலப்பதைத் தடுக்க வேண்டும். தெரு நாய்களையும், சுற்றித்திரியும் மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டதின் போது பழுதடைந்து இயங்காத, சிறுமின் விசை மோட்டாா் பொருத்திய குடிநீா்த் தொட்டிக்கு, பறை அடித்துக் கொண்டு ஊா்வலமாகச் சென்று மாலை அணிவித்து முழக்கம் எழுப்பினா்.
போராட்டத்துக்கு, கட்சியின் மாநகரக் குழு உறுப்பினா் மருத்துவா் ஆா். காா்த்திக் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினா் டி. காயத்ரி, மாநகரக் குழு உறுப்பினா்கள் சி. அடைக்கலசாமி, ஆா். சோலையப்பன், எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.