ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!
`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென்ன?
இங்கிலாந்தில் வசிக்கும் எஞ்சினியர் ஒருவர் தனது மறைந்த தந்தையின் ஆசீர்வாதத்தால் ரூ.11 கோடி லாட்டரியில் வென்றதாக நம்புகிறார்.
போல்டனில் வசிக்கும் 46 வயதான டாரன் மெக்குவைர் என்பவர் அவரது தந்தையின் பிறந்த நாள் மற்றும் அவர் மறைந்த தினத்தை அடிப்படையாகக் கொண்ட எண்களை லாட்டரியில் தேர்வு செய்திருக்கிறார்.
அதுவே அவருக்கு 10 லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.77 கோடி) பரிசுத் தொகையை பெற்றுத் தந்துள்ளது.
இதுகுறித்து டாரன் கூறுகையில் “எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அப்பாவை என்றும் நினைவில் வைத்திருக்கிறோம். அதனால் அவரின் நினைவாகவே அந்த எண்களைப் போட்டேன்”.
லாட்டரி டிரா நடந்த நாளில், நான்கு ஆண்டுகளாக பூக்காத அவரது தோட்ட ரோஜா செடிகள் திடீரென சிவப்பாக மலர்ந்த சம்பவத்தையும் அவர் உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார்.
“அது அப்பா தரும் சிக்னல்தான் என நினைத்தேன். அந்த நாளே லாட்டரியும் எனக்கே வந்து சேர்ந்தது. இது நம்ப முடியாத அதிசயம்” என அவர் கூறியிருக்கிறார்.
இருபது ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வரும் தனது துணை லாரா துவெயிட்ஸ் உடன், தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் டாரன். அதோடு குடும்பத்துடன் ஸ்பெயின் சென்று விடுமுறையை கழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.