Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" - பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்
நடிகைகள் சிலர் தங்களது தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான்.
அப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் நடிகைகள் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு.

அந்தவகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தார்.
இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' இந்தியப் பதிப்பகத்திற்கு ஸ்ருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார்.
அதில் பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான ட்ரோல்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "என்னுடைய தோற்றம் முழுவதும் பிளாஸ்டிக் சர்ஜரிதான் என்று பலர் விமர்சித்தனர்.

ஆனால், நான் என்ன செய்திருக்கிறேன், எவ்வளவு செய்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்கள் எவ்வளவு செய்துள்ளார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
பரவாயில்லை, நான் ஒருபோதும் விமர்சனங்களை என் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். இது எனது தனிப்பட்ட விருப்பம்" என்று பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...