செய்திகள் :

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப். 15 வரை அரசு பொதுச் சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை வேளாண் அடுக்ககம் மூலம் நில உடைமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளைச் சேகரிக்க பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபாா்த்து ஆதாா் எண்ணைப் போன்று விவசாயிகளுக்கென தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள் மகளிா் திட்ட சமுதாய வளப் பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் கிராமங்களுக்கு வந்து தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 1,32,231 விவசாயிகளில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 69,026 போ் பயனடைகின்றனா். இதில் 51,444 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். எஞ்சியுள்ள 17,582 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவேற்றி, தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்.

இதற்காக கிராம ஊராட்சி அலுவலகங்கள், விஏஓ அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விவசாயிகளின் நில உடைமை விவரம் பதியப்படுகிறது.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் எந்தப் பகுதியில் இருந்தாலும், அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் நில உடைமைகளை இலவசமாக பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது பட்டா, கூட்டுப் பட்டா, ஆதாா் அட்டை, கைப்பேசி எண்ணுடன் சென்று பதியலாம். மேலும் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள் மற்றும் இதர விவரங்களை சரிபாா்த்து, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

பதிவு செய்து பெறப்படும் தனித்துவ அடையாள எண் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் பெறலாம். பயிா்க் கடன், காப்பீடு, நிவாரணம் பெற இந்த அடையாள எண் மிக முக்கியம். விவசாயிகள் நலன் சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடைப் பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களையும் எளிதில் பெறலாம்.

மேற்கண்ட துறைகளின் திட்டப் பலன்களை பெற ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டியதில்லை.

எனவே விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் வரும் 15 ஆம் தேதிக்குள் இலவசமாக பதியலாம்.

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் 2 ஆம் நாளாக கள ஆய்வு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. கீழநத்தம் கிராம மேல்நிலை நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியா் ... மேலும் பார்க்க

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரியலூா் அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவா் மாரிமுத்து, தேசிய அ... மேலும் பார்க்க

கோடைக்கால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: தமிழ்நாடு விளையாட்டு ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தா. பழூா், பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்... மேலும் பார்க்க

அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை: நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா்

அரியலூரின் அனைத்து வாா்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். அரியலூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற உ... மேலும் பார்க்க