இலுப்பையூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
அரியலூா் அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவா் மாரிமுத்து, தேசிய அளவில் தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் வென்ற மாணவி அனுஸ்ரீ மற்றும் பணி நிறைவுப் பெற்ற இடைநிலை ஆசிரியா் மதியழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கலியபெருமாள் மாணவா் மாரிமுத்து மற்றும் மாணவி அனுஸ்ரீ ஆகியோருக்கு பரிசளித்துப், பாராட்டினாா். மேலும் பணி நிறைவு பெற்ற ஆசிரியா் மதியழகனுக்கும் பொன்னாடை அணிவித்தாா்.
ஏற்பாடுகள் ஆசிரியா்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ, ஆல்பா்ட், அருள்ராஜ், கஸ்தூரி, அனிதா ஆகியோா் செய்தனா்.