ஜெயங்கொண்டம், தா. பழூா், பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குவாலப்பா்கோயில், பிச்சனூா், வாரியங்காவல், தேவனூா், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா. பழூா், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கட்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புக்குடி, தென்னவநல்லூா், இடைக்கட்டு, ஆயுதக்களம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்தாா்.