செய்திகள் :

தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்

post image

சென்னை: தனியாரை மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ) நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தொடர்ந்து மீண்டும் மீண்டும் நம் போராடுவதற்கான காரணத்தை நம் அறிவோம். ஆனாலும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையுள்ளது. புதிதாக நாம் வைக்கக்கூடிய கோரிக்கை 2011 மக்கள் தொகை அடிப்படையில் மூன்று சதவிகிதம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளவையும் உயர்த்த வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கூடாது என்று உறுதியாக உள்ளார்கள்.

வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16(4A)-க்கான சட்டம் வரும் என்று பெரிதும் நம்புகிறேன், பதவி உயர்வுக்காக காத்திருக்க கூடியவர்களுக்கு சட்ட பாதுகாப்பை தருகிற ஒரு வாய்ப்பை அதிகாரத்தை 16(4A) தருகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டத்தின் முக்கியமான கோரிக்கை. மத்திய அரசுதான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது, அவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கின்ற சக்திகளும் இருப்பதை 2013 இல் நம்மால் பார்க்க முடிந்தது. அந்த சட்டம் நிறைவேறி இருந்தால் இந்த சட்டத்தை நிறைவேற்ற கோர வேண்டியதில்லை , மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக்கான ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை, பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் பதவி உயர்வுக்கான சட்டத்தை கொண்டு வர எந்த முனைப்பும் காட்டவில்லை, ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அவர்களுக்கு உடன்பாடு கிடையாது, இட ஒதுக்கீட்டு கொள்கையால்தான் தரம் தாழ்ந்து விட்டது என்று நம்புகிறார்கள். இதற்காகவே அரசுத்துறைகளையும் பொதுத்துறைகளையும் தனியார் மையப்படுத்த விரும்புகிறார்கள், தனியார் மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றார்.

ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல: தோ்தல் ஆணையம்

மேலும், வருகிற ஐந்தாம் தேதி நடக்கவுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிறவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை, மும்மொழிக் கொள்கையை வரவேற்கிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது, இந்தியை படிக்க வேண்டும் என்று பாஜகவிற்கு ஆதரவாக கருத்தை பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக் கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது. இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது அவர்களின் திறனை கற்றுக் கொள்வதற்கான வேட்கை, தமிழ்நாட்டில் பல தனிநபர்கள் எத்தனையோ மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். அதனை யாரும் எதிர்க்கவில்லை, அரசே ஒரு மொழி திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி. எனவேதான் இந்த சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறோம்.

கூட்டணி பேரத்தை துவங்கவில்லை

விசிக கூட்டணி பேரத்தை துவங்கவில்லை அது வியூகம் . தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்குவார்கள்.

ஆசை நிறைவேறாது

திமுக கூட்டணி உடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்த நிலையில் , ஜெயகுமாரின் ஆசை நிறைவேறாது என்று திருமாவளவன் கூறினார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாகவும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொ... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல: தோ்தல் ஆணையம்

புதுதில்லி: வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 ச... மேலும் பார்க்க

"தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்"

சென்னை: தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி விடக் கூடாது: ராமதாஸ்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 52.30 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்க தவறிய அரசும், காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து... மேலும் பார்க்க

மருமகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: மாயாவதி

லக்னௌ: மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட ... மேலும் பார்க்க

பதட்டமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து

பதட்டமில்லாமல் தேர்வு எழுதுமாறு பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.12- ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும்... மேலும் பார்க்க