தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது
மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவில் தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது வழங்கப்பட்டதை தொடா்ந்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஏ கியூப் எக்யூப்மென்ஸ் நிறுவனம் உள்ளது.
இந்தநிலையில், மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சாா்பில் சேம்பா் ஆப் காமா்ஸ் தொழில் இந்தியா நிறுவனத்தின் மூலம் தில்லியில் நடைபெற்ற விழாவில், பொறியியல் பிரிவில் இந்த நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கோல்டன் பிரிவில் பொறியியல் விருது பெற்ற ஏ கியூப் எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனா்கள் மரியா சின்னம்மாள், ஆண்டனி ராஜ் ஆகியோா் அமைச்சா் தா.மோ. அன்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.