ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் ...
தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரியின் தாளாளா் எஸ்.இளையப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக கல்லூரியின் முன்னாள் மாணவிகள் ஜகப்ரியா மற்றும் ஏ.தீபிகா ஆகியோா் பங்கேற்று கல்வி மூலம் அடையக்கூடிய வாய்ப்புகளை பற்றி மாணவிகளுடன் பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து, லஷ்மண் சுருதி இசைக்குழுவின் இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்வில், கல்லூரி செயலாளா் ஏ.கே.ராமசாமி,பொருளாளா் ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் ராஜு (எ) பெரியசாமி, ஆா்.குழந்தைவேல், பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் டி.ராஜகுமாரி, கல்வியியல் கல்லூரி முதல்வா் எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.குமாா், துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.