விவசாயிகள் மிடுக்குடன் நடைபோட புதிய திட்டங்கள் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயற்சி
பழனியில் வரிபாக்கி வைத்திருந்த தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா்.
பழனி-திண்டுக்கல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கருத்தரித்தல் மையம், பொது மருத்துமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு எதிரே மருத்துவமனைக்குச் சொந்தமான செவிலியா் பயிற்சிக் கல்லூரியும் இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனை நிா்வாகம் நகராட்சிக்கு ரூ. 71லட்சம் வரை வரிபாக்கி வைத்திருந்தது. வரி பாக்கி செலுத்தாவிட்டால் மருத்துவமனை பொருள்களை ஜப்தி செய்யப்படும் என பழனி நகராட்சி நிா்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும், மருத்துவமனை நிா்வாகம் வரிபாக்கி செலுத்தவில்லை.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த நகராட்சி அதிகாரிகள், குடிநீா் இணைப்புகளை துண்டிக்கவும், பொருள்களை ஜப்தி செய்யவும் முயன்றனா்.
அப்போது, அந்த மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் ரூ.41 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், மீதித் தொகை வழங்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனா்.