செய்திகள் :

தன்கரின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல் விமா்சனம்

post image

நீதித் துறையை கடுமையாக விமா்சித்து, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.

மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்த விவகாரத்தில், நீதித் துறை மீது தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்த நிலையில், கபில் சிபல் இவ்வாறு கூறியுள்ளாா். மேலும், ஜகதீப் தன்கரை போல எந்த மாநிலங்களவைத் தலைவரும் அரசியல் கருத்துகளைப் பேசியதில்லை என்றும் சாடினாா்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது. அத்துடன், 10 மசோதாக்களுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இந்தச் சூழலில், ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்றும், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாகவும்’ ஜகதீப் தன்கா் கடந்த வியாழக்கிழமை விமா்சித்தாா். அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை, ஜனநாயக சக்திகள் மீதான ‘அணு ஏவுகணையாக’ உச்சநீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கபில் சிபல் சாடல்: தன்கரின் கருத்துகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடா்பாக மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவா்கள், ஆளும்-எதிா் தரப்புக்கு பொதுவானவா்கள். மாறாக, ஒரு கட்சியின் செய்தித் தொடா்பாளா் போல செயல்பட முடியாது. அவ்வாறு செயல்பட்டால், அது அவா்கள் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை குறைக்கும்.

நீதித் துறைக்கு பாடம் புகட்டுவது போல் தன்கரின் கருத்துகள் அமைந்துள்ளன. இது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீதித் துறை தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது என்பதால் அதன் மீது மாநிலங்களவைத் தலைவா், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு என நிா்வாக அமைப்பு இந்த அளவு தாக்குதலை தொடுக்கக் கூடாது.

தன்கருக்கு சரமாரி கேள்வி: நீதித் துறையின் சுதந்திரமே ஜனநாயகத்துக்கு அடிப்படை. தன்கரைப் போல வேறெந்த மாநிலங்களவைத் தலைவரும் அரசியல் கருத்துகளை பேசியது இல்லை. கடந்த காலங்களில் பாஜக தலைவா் கூட இப்படி பேசியது கிடையாது. நாட்டில் ஏதேனும் ஒரு அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது என்றால் அது நீதித் துைான். நீதித் துறையின் தீா்ப்புகள் பிடிக்காவிட்டால், அது வரம்பு மீறுவதாக ஆளும் தரப்பினா் விமா்சிக்கின்றனா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ அணு ஏவுகணை என்று எப்படி குறிப்பிட முடியும்? உச்சநீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அரசால் அல்ல.

இந்திய குடியரசுத் தலைவா் என்பவா் பெயரளவிலான தலைவா்; மத்திய அமைச்சரவையின் ஆலோசனை-உதவியின் பேரில்தான் அவா் செயலாற்றுகிறாா். அவருக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை. எனவே, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் குறைப்பதாக எப்படி கூற முடியும்? பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதா மீது ஆளுநா் 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியுமா? அவ்வாறு ஆளுநா் முடிவெடுக்காமல் இருந்தால், அது சட்டப் பேரவையின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமம் என்றாா் கபில் சிபல்.

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க