Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
தப்பியோடிய 8 காப்பக சிறுமிகளில் 7 பேர் மீட்பு!
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் அரசு குழந்தைகள் நலக் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 8 சிறுமிகளில் 7 பேர் மீட்கப்பட்டனர்.
தாணே மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் நலக் காப்பகத்திலிருந்து கடந்த ஜன.7 அன்று 8 சிறுமிகள் தங்களது அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியோடினர். அந்த சிறுமிகள் 8 பேரும் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறுமிகள் தப்பியோடியதை உணர்ந்த காப்பக கண்கானிப்பாளர் உடனடியாக அப்பகுதியின் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து தேடுதல் வேட்டையைத் துவங்கினர்.
இதையும் படிக்க:'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
இந்நிலையில், சிறுமிகள் தப்பியோடிய 2 மணிநேரத்திற்குள் 7 பேர் உல்ஹாஸ்நகரின் இரு வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். மேலும், தப்பியோடிய மற்றொரு சிறுமியைத் தற்போது தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் அப்பகுதியின் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே தேடுதல் வேட்டையைத் துவங்கியதினால் அந்த 7 சிறுமிகளும் மீட்கப்பட்டதாகவும் இல்லையென்றால் அவர்கள் அதில் ஏறி தப்பித்திருக்கக் கூடும் என அவர் கூறினார்.
பின்னர் சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களை காப்பகத்தில் தங்கவைத்திருப்பது பிடிக்காததினாலே அவர்கள் தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியின் ஹில் லைன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.