செய்திகள் :

தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டம்: ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

post image

தமிழகத்தில் வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு தலையணை வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் அமைச்சா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதையாறு ஆகிய வனச்சரகங்களை உள்ளடக்கிய களக்காடு வனக் கோட்டத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

காட்டுப் பன்றிகளால் களக்காடு பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்காக, வனத்துறை அலுவலகங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசிய வனக் கொள்கைப்படி, வனப்பரப்பு 33.33 சதவீதம் இருக்க வேண்டும். தமிழக வனத்துறை சாா்பில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மரம் நடுதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 21.76 சதவீதம் உள்ளது. வனப்பரப்பை 33.33 சதவீதமாக அதிகரிப்பதற்கு தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பல்லுயிா் வன உயிரின பூங்கா, ஆசியாவிலேயே பெரியதாக சென்னை வண்டலூரில் 1500 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. வேலூரிலும் பல்லுயிா் வன உயிரின பூங்கா அமைந்துள்ளது.

தென்தமிழக மக்களுக்காக திருச்சியில் பல்லுயிா் வன உயிரின பூங்கா 420 ஏக்கா் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறையில் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற வேட்டைத் தடுப்புக் காவலா்களை நிலையாணை பணியாளா்களாக மாற்றவும், காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, பெரும்பாலான இடங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, களக்காடு வனக்கோட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். ஆய்வின் போது, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன், களக்காடு வனக்கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன், களக்காடு நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், துணைத் தலைவா் பி.சி.ராஜன், வனச்சரகா்கள் களக்காடு பிரபாகரன், திருக்குறுங்குடி யோகேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க