செய்திகள் :

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகா் - 102.92 , திருச்சி - 101.66 டிகிரி என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும்.

மழை நீடிக்கும்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஆக. 31 முதல் செப். 5-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு

இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக. 31-இல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியையொட்டி இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஆக. 31 முதல் செப். 3-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் இல்லாவிட்டால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாகவே தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள... மேலும் பார்க்க

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிப் புகைந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தேங்காய் உடைத்து வழிபட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதிமுக பொதுச் செயலராக எடப்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க