பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை ...
தமிழகத்தில் இரு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்
தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.7,8) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.7) முதல் பிப்.12 வரை வட வானிலை நிலவும். இதில் பிப்.7,8 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதேசமயம் காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். எனினும் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.