செய்திகள் :

தமிழகத்தில் எங்கெல்லாம் போர் ஒத்திகை? தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

post image

நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல் போன்றவை ஒத்திகை செய்யவுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் ஒத்திகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க : போா் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை!

சித்ரா பௌர்ணமி : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விழுப்புரம்: சித்ரா பௌர்ணமியையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க