செய்திகள் :

தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!

post image

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு வரும் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப். 9 ஆம் தேதி முதல் ஏப். 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!

அதேபோல், 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 8 ஆம் தேதி முதல் ஏப். 24 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 21 ஆம் தேதியில் இருந்தும் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரு... மேலும் பார்க்க

நாளை 4 மண்டலங்களில் தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங... மேலும் பார்க்க

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை: திட்டக் குழு துணைத் தலைவா்

தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தாா். தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை வ... மேலும் பார்க்க