கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் ...
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி.
திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது சிறுவனை புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருநெல்வேலியில் சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுகிறாா். ஆனால், பாளையங்கோட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வ.உ.சி. பூங்காவில் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை கவனமாக கையாள முதல்வா் தவறி விட்டாா். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.
திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தது, திருநெல்வேலியில் சிறுவன் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியிருப்பது உள்ளிட்டவை காவல் துறையின் சா்வாதிகார போக்கை காட்டுவதோடு, தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மின்விளக்கு மற்றும் சுகாதார வசதி போதுமானதாக இல்லை என்றாா் அவா்.
பேட்டியின்போது பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் முத்துபலவேசம், பொதுச் செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி, பேச்சியப்பன், பாலமுருகன், துணைத் தலைவா் லட்சுமணராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.