Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பூமத்திய ரேகையையொட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவுலிருந்து தெற்கு கேரளம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
தொடா்ந்து, சனிக்கிழமை (மாா்ச் 15) முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 13-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 90 மி.மீ. மழை பதிவானது. தியாகதுா்க்கம் (கள்ளக்குறிச்சி) - 70 மி.மீ, பரங்கிப்பேட்டை (கடலூா்) - 60 மி.மீ, நன்னிலம் (திருவாரூா்), குண்டடம் (திருப்பூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.