செய்திகள் :

தமிழகத்தில் முதன்முறையாக AI தொழில்நுட்பத்தில் ATM மூலம் நகைக் கடன்.. பரமக்குடியில் அறிமுகம்!

post image

சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்கள் நகைக் கடன்களை எளிதாக பெறும் வகையில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் நகைகடன் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கிளையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி கிளையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில் நுட்பத்துடன் தமிழகத்தில் முதன் முறையாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் மாதம் வெங்கடராவ் திறந்து வைத்தார்.

திட்டத்தை துவக்கி வைத்த நிர்வாக இயக்குனர்

இந்த நவீன திட்டத்தின் வாயிலாக நகைக் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளரின் செல் நம்பர் மற்றும் ஆதார் நம்பர் ஆகியவற்றை செலுத்திய பிறகு தங்க நகையினை இயந்திரத்தின் ஒரு பகுதியில் வைத்தவுடன் அந்த நகைக்கான மதிப்பு தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் தங்க நகைக்கு பதிலாக கடன் தொகையினை எடுத்துக்கொள்ளவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கவோ செய்யலாம்.

இந்த நவீன நகைக் கடன் ஏ.டி.எம் வசதியில் நகை கடன் பெற விரும்பும் வங்கி வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுவதுடன் எளிதாக நகை கடன் தொகையினை பெற்றுச்செல்ல முடியும் எனவும் அடகு வைக்கப்படும் நகைகளின் தங்கதின் தன்மையும் உறுதிபடுத்தப்படும் என வங்கி நிர்வாக இயக்குநர் மாதம் வெங்கடராவ் தெரிவித்தார்.

Home Loan: குறையும் வட்டி விகிதங்கள்; புதிய, பழைய வீட்டுக் கடனாளர்கள் என்ன செய்யலாம்?

2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு நிச்சயம் நமது வீட்டுக் கடன்களில் பிரதிபலிக்கும். அதாவது, இந... மேலும் பார்க்க

Home Loan: 'வீட்டுக் கடன் வலையில் சிக்காமல் இருக்க...' - 8 ஸ்மார்ட் டிப்ஸ்!

பலரின் வீட்டுக் கனவை இந்தக் காலத்தில் சாத்தியப்படுத்துவது, 'வீட்டுக் கடன்'. 'அது தான் கிடைக்கிறதே' என்று வீட்டுக் கடனை வாங்கினால், சிக்கலில் மாட்டிக்கொள்வோம். அதனால், வீட்டுக் கடனை வாங்கும்போது, கவனிக... மேலும் பார்க்க

ரெப்போ விகிதத்தை குறைத்த RBI; ரியல் எஸ்டேட்டுக்கு ஜாக்பாட் - வீட்டுக் கடன் வாங்கியிருப்பவரா நீங்கள்?

வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு இது ஒரு 'பம்பர் ஆண்டு' என்றே சொல்லலாம். இன்றோடு இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் ... மேலும் பார்க்க