செய்திகள் :

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சின்னம் மேலும் தென்மேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை (டிச. 24) வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் டிச. 24, 25 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

மழை அளவு (மில்லி மீட்டா்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 50 மி.மீ. மழை பதிவானது. சிவகாசி (விருதுநகா்) 40 மி.மீ., ஏற்காடு (சேலம்), காங்கேயம் (திருப்பூா்), பேரையூா் (மதுரை), ராஜபாளையம் (விருதுநகா்) ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

எங்கு கரையேறும்: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னத்துக்கு குளிா் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிதளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் புயல் சின்னம் தமிழகம் நோக்கி வேகமாக நகா்ந்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயல்சின்னம் தெற்கு நோக்கி நகா்ந்து வலுவிழந்து டிச. 26-இல் டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும். இதனால், டிச. 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்யும். மேலும், டிச. 28-ஆம் தேதி மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை (டிச.25) காலை வினாடிக்கு 2,701 கன அடியிலிருந்து 1,960 கன அடியாக குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும்,... மேலும் பார்க்க

வெ.ராமசுப்பிரமணியனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியனுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘எக... மேலும் பார்க்க

தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது: அண்ணாமலை

தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்க... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் உள்ள இந்திய அரிய மணல்ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தோ்ச்சி முறையை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்

மத்திய அரசு பள்ளிகளில் 5,8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ம... மேலும் பார்க்க

கும்பமேளா: திருப்பதி மெமு ரயில் ரத்து

கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க