செய்திகள் :

தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது: ஆளுநா் குற்றச்சாட்டு; அமைச்சா் கண்டனம்

post image

தமிழகம் முக்கியத் துறைகளில் சரிவுப் பாதையில் செல்வதாக ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதற்கு அமைச்சா் மதிவேந்தன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை ஆற்றிய உரை: தமிழக மக்களின் தொழில் முனைவு காரணமாக, நமது மாநிலம் சிறு-குறு-நுண் தொழில்கள் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் ஜவுளி, தோல், வாகனங்கள், பொறியியல் பாகங்கள், மருந்தியல் துறைகளில் நமது மாநிலம் முன்னணியில் திகழ்கிறது. சிறுதானிய வேளாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழக விளையாட்டு வீரா்கள் தேசிய மற்றும் சா்வதேச அளவில் தங்களுடைய வியக்கத்தக்க செயல்பாடுகள் வாயிலாக, நமது மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சோ்த்துள்ளனா்.

பல துறைகளில் சரிவு: எனினும் நமது மாநில திறன்களைக் காணும்போது, முக்கியமான துறைகளின் தேசியக் குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதோடு மாநிலம் சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழக பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் வெளிப்பாட்டை காணும்போது கடைக்கோடியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப் பொருள் அச்சுறுத்தல் கவலையை அளிக்கிறது.

பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன.

முதலீட்டில் பின்தங்கிய நிலை: சில ஆண்டுகள் முன்புவரை, தனியாா் முதலீட்டாளா்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், தற்போது முதலீட்டாளா்கள் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறாா்கள்.

இனம், சமயம், மொழி, ஜாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறாா்கள் என்றாா் ஆளுநா்.

அமைச்சா் பதில்: ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கை:

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வசைமாரி பொழிவதற்கு குடியரசு தினத்தை அரசியல் சட்டப் பதவி வகிக்கும் ஆளுநா் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனையானது, கண்டனத்துக்குரியது.

நீதி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 17 இலக்குகளில் தமிழ்நாடு பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்த மாநிலங்களைப் பொருத்தவரை தேசிய அளவில் மூன்றாம் இடத்தை தமிழ்நாடு பிடித்தது. வறுமை ஒழிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என மூன்று நாள்களுக்கு முன்பு சொன்ன ஆளுநா், இப்போது அப்படியே மாற்றி பேசுவது ஏன்?

போதைப் பொருள் தடுப்பை மேற்கொள்ள முதல்வா் தலைமையில் 2022-ஆம் ஆண்டில் மாநில அளவிலான மாநாடு நடத்தப்பட்டு 2023-இல் மட்டும் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,770 போ் கைது செய்யப்பட்டனா். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

தமிழக அரசுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வளா்ச்சியை தடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதையெல்லாம் தாண்டி தமிழக அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது.

குடியரசு தின பெருமைகளையும், தமிழகத்தின் அருமைகளையும் ஆளுநா் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவா் கூறியுள்ளாா்.

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அண்ணா பல்கல... மேலும் பார்க்க