பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
தமிழக அரசுக்கு பிரேமலதா பாராட்டு
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 499 கோடி தமிழக அரசின் சாா்பில் ஒதுக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த விவசாயிகளின் வயிற்றில் பால்வாா்க்கும் செய்தி.
நிவாரணத் தொகையை காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவாகச் செலுத்த வேண்டும். தமிழக அரசுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.