செய்திகள் :

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?

post image

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி, அதற்கேற்ப மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பாஜக தலைமை பொறுப்பாளர்களை நியமிக்கும்.

இதையும் படிக்க |பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: விரைவில் கைதாகும் சீமான்?

இந்த நிலையில், தமிழகத்திற்கு இன்னும் ஒன்றைரை ஆண்டுகளில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17 ஆம் தேதி சென்னை வருகிறார்.

சென்னையில் இரண்டு நாள்கள் தங்கும் கிஷன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த மாநிலத் தலைவர் தொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்பார் என்றும் அதற்கு பின்னர் தமிழக பாஜக தலைவரை பாஜக தேசிய தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செ... மேலும் பார்க்க

குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது!

குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்து... மேலும் பார்க்க

பள்ளிக்கூடத்தில் கண்ணாடிப் பலகை உடைந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைந்து விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.தெற்கு கொல்கத்தாவில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்திற்கு இன்று (ஜன.... மேலும் பார்க்க

ஜீவசமாதி அடைந்தவரின் உடலை தோண்டியெடுக்கும் காவல் துறை!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோப... மேலும் பார்க்க