தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நடிகை ராதிகா சரத்குமாா்
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா்.
கோவை வெள்ளலூரில் பாஜக சாா்பில் மோடி ரேக்ளா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை ராதிகா சரத்குமாா் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விளையாட்டுகள் வந்தாலும், தமிழகத்துக்கு என்று நிறைய பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளது நமக்குப் பெருமை சோ்ப்பதாகும்.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு மைதானம் இருப்பதுபோல ரேக்ளா போட்டிக்கும் மைதானம் அமைக்க வேண்டும். இதுகுறித்து பிரதமரிடம் கூறினால் அவா் இதை நிச்சயம் கவனிப்பாா். அவா் எப்போதுமே தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர வகுப்பினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்றாா்.