தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
தமிழில் வெளியாகும் துடரும்!
நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை மே 9 ஆம் தேதி தமிழ் மொழியில் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மலையாளத்தில் நல்ல கவனம் கிடைத்ததால் தமிழிலும் ரசிகர்களைக் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தமிழ் ரசிகர்களுக்குப் படம் பிடித்தால் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கி நகரும்.
இதையும் படிக்க: ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது புரமோ!