செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (துலாம்)

post image

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

கிரகநிலை:

 ராசியில் சந்திரன் - பஞசம  ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026 அன்று சனி பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

சுய தேவைகளை விட்டுக்கொடுத்து அடுத்தவர் நலம் சிறக்க செயலாற்றி நற்பெயர் பெற்றுவரும் துலாம் ராசி அன்பர்களே!

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும. நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும்.

வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். குலதெய்வ அருளும் பூர்வ ஜென்ம புண்ணியமும் தெய்வ வழிபாட்டின் மூலமும் மட்டுமே பெறமுடியும்.

உங்க்களுக்கு துரோகம் செய்தவர்கள்  வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். குருவின் அருளால் எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பை தருவார்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல்நலத்தில் தகுந்த கவனம் தேவை. நோய் நொடி இல்லாத சுக ஜீவன வாழ்க்கை அமையும்.

தொழில் சம்பந்தமான வகையில் முன்னேற்றமான மாறுதல்கள் உண்டு. தந்தை வழி சார்ந்த உறவினர்கள் அனுகூலமாய் நடந்து கொள்வார்கள்.  வெளியூர் பிரயாணங்கள் கூடுதலாக சென்று வரும் மார்க்கமும் அதனால் பொருளாதார உயர்வுகளும் உண்டு.

உத்தியோகஸ்தர்கள்: அரசுத்துறையில் குடிநீர் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள்,  பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். வீடு மனை வாகனங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. புத்திரர்களின் நடவடிக்கைகளை கவனமுடன் பார்த்துவர வேண்டும். எதிரானவர்கள்  செய்தவர்கள் இடம்மாறி போய்விடுவார்கள். மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் குடும்பம் மகிழ்வாக இருக்கும். தொழிலதிபர்கள், மினரல் வாட்டர் உற்பத்தி செய்பவர்கள் குளிர் சாதன பெட்டிகள் ஏர்கூலர்கள் வாட்டர் ஹீட்டர்கள் போன்ற சாதனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் முன்னேற்றம் காண்பார்கள். குளிர்பானங்கள் சர்பத் வகைகள் மற்றும் நறுமன பால் போன்ற பானங்களை உற்பத்தி செய்பவர்கள் உபயோகிப்பாளர்களால் அதிகம் விரும்பப்பட்டு விற்பனையிலும் வருமானத்திலும் உயர்வு பெறுவார்கள். செயற்கை முத்து தயாரிக்கும் தொழில் அதிபர்கள் வளம் பெறுவார்கள். லாட்ஜ் மற்றும் பெரிய ஒட்டல்களை நடத்துபவர்கள் தங்கள் தொழிலில் அதிக வாடிக்கையாளர் பெற்று தொழிலில் மேன்மை அடைவார்கள். மனதில் ஆன்மிக எண்ணம் மிகும். வீடு மனை வாகனங்களில் அபிவிருத்தி பணிகள் நடக்கும்.

வியாபாரிகள்: அடி பம்புகளுக்கான உதிரிபாகங்கள், நீர்ப்பாசன குழாய் சோடா மற்றும் குளிர்பானங்கள் ஏர்கண்டிஷன் மிஷின் உதிரிபாகங்கள் விற்பவர்கள், சலவை கோப்பு பவுடர் விற்பனை செய்வர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். டீக்கடை ஐஸ் வியாபாரம் சிறக்கப்பெற்று தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்களச் செலவுகளை உருவாக்கித்தரும்.

மாணவர்கள்: மெக்கானிக்கல் பயிற்சிபெறும் மாணவர்கள்,  பிளம்பிங் கப்பலில் பணிபுரிவதற்கான தகுதி படிப்பு பெறும் மாணவர்கள்,  மீன் வளர்ப்பு மீன் பராமரிப்பு பயிற்சி பெறும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு, கமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். அலுவலகக் பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும்.

அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.  பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். மனதில் சோர்வு அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் தனிகவனம் செலுத்தவும். 

கலைத்துறையினர்:  சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரதர்கள் சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள். வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் கோகமும் உண்டு.  

 சித்திரை - 3, 4

இந்த ஆண்டு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம்.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி

இந்த ஆண்டு குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.   எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் - 1, 2, 3

இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும். 

பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமாத்ரே நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

ரூ.200 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்பட... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திர... மேலும் பார்க்க

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்ப... மேலும் பார்க்க

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்த... மேலும் பார்க்க

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் ... மேலும் பார்க்க

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா். ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏட... மேலும் பார்க்க