செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மகரம்)

post image

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞசம  ஸ்தானத்தில் குரு - களத்திர  ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026  அன்று சனி பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்டுப்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!

இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு.

வாகன போக்குவரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். மனைவிவகை உறவினர்கள் உங்கள் உதவிகளை நாடி வரவும் மார்க்கம் உண்டு. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமையில் இணக்கமான சூழ்நிலை உண்டு.

தந்தையின் ஆதரவுடன் புதய தொழில்கள் துவங்கி செயல்படுவீர்கள். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்ள வாய்பபுகள் உண்டாகும். முன்ஜென்ம கர்மாக்களை தகுந்த சாஸ்திரங்கள் மூலமாக நிவர்த்தி செய்யும் சூழ்நிலை ஏற்படும். ஆயுள் அபிவிருத்தியும் உடல்நலம் ஆரோக்கியமும் சிறக்க கிரக அனுகூலம் உண்டு. இளையதாரம் என்னும் அமைப்பை பெற்றவர்கள் குடும்பத்தில் மனக்குழப்பங்கள் உருவாகி சில காலம் கருத்து வேறுபாடுகளுடன் வாழ்ந்து பின்னர் சுமுகநிலை உண்டாகும்.

வெளிநாட்டு தொடர்புகள் உள்ள நண்பர்களின் மூலமாக வீட்டு உபயோக நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களைப் பகைத்துக் கொள்ள உங்கள் எதிரிக்கு கூட மனம் வராது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் இனி இருக்காது. நூலகம், அஞ்சல் துறையினர் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் துறைகளில் பணிபுரிபவர்கள் சிறப்பு பெறுவர். வேலையில் இருந்து கொண்டே உபதொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் காணலாம். வாகனங்களை வைத்திருப்பவர்கள் சரியான முறையில் பராமரிப்பு செய்தல் அவசியம். இல்லெயேல் வீண் செலவுகள் வரலாம்.

 தொழிலதிபர்கள்: கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். டிவி,  செல்போன், வி.சி.டி மற்றும் டி.வி.டி ஆகியவற்றின் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்றும் தொழிலதிபர்கள் புதிய சந்தை பாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். சென்ட் மற்றும் வாசன கோப்பு நிறுவன அதிபர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்கள். பீங்கான் பொருட்களில் கலை அழகு மிக்க பொருட்களை உற்பத்தி செய்வோர் லாபம்  பெறுவர். மனிதாபிமான செயல்கள் அதிகம் செய்வதால் சமூசத்தில் அந்தஸ்தும் புகழும் ஏற்பட்டு கவுரவமான பதவிகள் கிடைக்கும்.

 விவசாயிகள் பழம் மற்றும் பூந்தோட்டத்தில் நல்ல வருவாய் காணலாம். ஏற்றுமதி சம்பந்தப்பட்ட இனங்களில் முதலீடு செய்வதும் நன்மையைத் தரும். உங்கள் தொழிலில் புதிய முறைகளை கையாளுவீர்கள். நல்லபெயர் கிடைக்கும். சில நேரங்களில் உங்கள் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும்.

மாணவர்கள்: தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். தந்தை மகன் உறவுமுறைகள் சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.

பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டி வரும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.

 கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும்.

 அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

 உத்திராடம் - 2, 3, 4

இந்த ஆண்டு பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்

இந்த ஆண்டு தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2

இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் லம் ஸ்ரீகமலதாரிண்யை நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6 

ரூ.200 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்பட... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திர... மேலும் பார்க்க

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்ப... மேலும் பார்க்க

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்த... மேலும் பார்க்க

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் ... மேலும் பார்க்க

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா். ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏட... மேலும் பார்க்க