செய்திகள் :

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

post image

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பதால் இந்தமுறை மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.

முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அடுத்த 2 போட்டிகளில் தோற்றது. கருத்து வேறுபாடு காரணமாக புதிய கேப்டன் பவன் செராவத் அணியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் 46-36 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.

ரெய்டு மூலம் 25 புள்ளிகள், டேக்கிள் மூலம் 15 புள்ளிகள், ஆல் அவுட் மூலம் 4 புள்ளிகள், எக்ஸ்ட்ரா 2 புள்ளிகள் என மொத்தம் 46 புள்ளிகள் பெற்று அசத்தியது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறி 6ஆவது இடம் பிடித்துள்ளது.

Tamil Thalaivas team won in the Pro Kabaddi League by scoring 46 points.

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் டிரா: நடப்பு சாம்பியன் ஜப்பானை வெளியேற்றியது இந்தியா!

மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய மகளிரணி 1-1 என டிரா செய்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹாக்கி ஆ... மேலும் பார்க்க

முதல்வர் படத்தில் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நான் தான் சிஎம் என்ற படத்தில் முதல்வர் கதாபா... மேலும் பார்க்க

கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

நடிகர் ஆமிர் கான் கூறியதாக பரவும் செய்தி போலியானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர... மேலும் பார்க்க

கருப்பு வெளியீட்டில் மாற்றம்?

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அத... மேலும் பார்க்க

ஹாங் காங் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக்! இந்த சீசனில் முதல்முறை!

ஹாங் காங் ஓபன் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் - சிராக் இணையினர் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்தாண்டில் முதல்முறையாக இவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள... மேலும் பார்க்க