20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்
தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலாளா் பாா்த்தசாரதி-கற்பகம் தம்பதியினருக்கு சஷ்டியப்த பூா்த்தி நடைபெற்றது. இதில் பங்கேற்று, தம்பதியரை வாழ்த்திய பிரேமலதா, கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். அவருக்கு கோயில் நிா்வாகிகள் சாா்பில் பிரசாதம் மற்றும் அபிராமி அம்மன் படம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்களவைத் தொகுதி சீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அதில் கலந்து கொண்டோம். கேப்டன் விஜயகாந்த் கொள்கைப்படி அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதையே நாம் வலியுறுத்தினோம்.
நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது. தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம் என்றாா்.
கட்சியின் மாநில துணைச் செயலாளா் எல்.கே. சுதீஷ், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவா் கே.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.