PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்
காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பனந்தாள் காசிமட அதிபா் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற பிராா்த்திக்கிறோம். வட புலத்தில் தமிழின் பெருமையை நிலைநாட்டிய குமரகுருபர சுவாமிகள் தோற்றுவித்த மடத்தின் பெருமையை தொய்வில்லாமல் எண்ணற்ற ஞானத் தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் முத்துகுமாசுவாமி தம்பிரான் என்று அதில் குறிப்பிடப்பட்டது.