ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!
தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்
நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்பன் (40). இவரது அண்ணன் மனோகரன் (43). இருவருக்குமிடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 04.10.2015 அன்று ஏற்பட்ட தகராறில் பச்சையப்பனை கடுமையாக தாக்கினாா் மனோகரன். இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோகரனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு, அரக்கோணம், இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்வை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் எதிரி மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து, அபராதத்தை கட்ட தவறினால் மேலும், ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து மனோகரனை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.