செய்திகள் :

தயாரிப்பாளராகும் சூரி?

post image

நடிகர் சூரி புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தது. குறிப்பாக, கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலையே ஈட்டின.

சூரியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன்வருகின்றன. அதேநேரம், தனக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள் மூலம் சூரி தன் சம்பளத்தை ரூ. 10 - 12 கோடி வரை உயர்த்தியுள்ளாராம்.

மேலும், தனக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளதால் ஏன் பிறர் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வேண்டும்? நாமே தயாரிப்பாளரானால் என்ன? என்கிற முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகராக இருந்த சூரியை இனி தயாரிப்பாளாராகவும் பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்!

இதையும் படிக்க: தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

actor soori plan to start new production company

விக்ரமை இயக்கும் பார்க்கிங் இயக்குநர்!

நடிகர் விக்ரம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீர தீர சூரன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்... மேலும் பார்க்க

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!

முன்னணி தொடர்களாக உள்ள கயல், எதிர்நீச்சல் -2 ஆகிய இரு தொடர்களை பின்னுக்குத்தள்ளி சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு ஆகிய தொடர்கள் முதலிடம் பிடித்துள்ளன. சின்ன திரைக்கான டிஆர்பி பட்டியலில், கயல் தொடரும் எ... மேலும் பார்க்க

தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

நடிகர் தனுஷுடான காதல் வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இட்லி கடை, தேரே இஸ்க் ... மேலும் பார்க்க

திரைப்படம் போல ஒளிபரப்பாகும் சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரு தொடர்கள் திரைப்படம் போன்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆக. 10) அண்ணா தொடர் இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பானது. இதேபோன்று... மேலும் பார்க்க