``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெ...
தருணம் திரையிடல் நிறுத்திவைப்பு... என்ன காரணம்?
பொங்கலையொட்டி நேற்று(ஜன. 14) வெளியான 'தருணம்' திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி, பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: ரெட்ரோ: ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள 'தருணம்' படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இந்த நிலையில், 'தருணம்' திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
"குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிகளவிலான திரைகளில் மீண்டும் திரையிடப்படும். புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது.