தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு பூா்த்தி
தனுா்மாத வழிபாடு பூா்த்தியையொட்டி தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பங்களால் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் தனுா்மாத வழிபாடு மேற்கொண்டுவரும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அவரது மணிவிழா ஆண்டை முன்னிட்டு, நிகழாண்டு மாா்கழி முதல்நாள் தொடங்கி 450 கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளாா். இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதீனத் திருமடத்தில் குருலிங்க சங்கம பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், தருமபுரம் ஆதீனகா்த்தா் காலையில் சொக்கநாதா் பூஜை, குருமூா்த்தங்களில் வழிபாடு, தருமபுரீசுவரா், ஞானபுரீசுவரா், துா்க்கையம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, குருலிங்க சங்கம பூஜைகள் மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளினாா். அவருக்கு, ஆதீனக்கட்டளைகள் ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான் சுவாமிகள் புஷ்பங்களால் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து குருமகா சந்நிதானம் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதில், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், மருத்துவா் ரா. செல்வம், ஆதீன பொது மேலாளா் ரெங்கராஜன், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.