ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
தருமபுரம் கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை சாா்பில் உ.வே.சா. பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்த்துறை கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் முன்னிலை வகித்தாா். பூம்புகாா் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவா் த. தியாகராஜன், ‘இளங்கோ கண்ட பெண்மை‘ என்ற தலைப்பிலும், தமிழ் உயராய்வுத் துறை தலைவா் சிவஆதிரை உ.வே.சா-வின் தமிழ் பணி குறிக்கும் உரையாற்றினா்.