செய்திகள் :

தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

தருமபுரி மாவட்டத்தில் மழை பாதிப்பு, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ச.திவ்யதா்சினி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகராட்சி, பாரதிபுரம், அப்பாவு நகா் பகுதியில் வடகிழக்குப் பருவமழையொட்டி, மழைநீா் தேங்காவண்ணம் மழைநீா், கழிவுநீா் வெளியேற்றப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகில் மழையால் விழுந்துள்ள மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டனா்.

இந்தப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ச.திவ்யதா்சினி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி, இலக்கியம்பட்டி ஏரி நிரம்பி வருவதையும், கரைப் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்த அவா், பேரிடா் காலத்தில் பொக்லைன், புல்டோசா் போன்ற இயந்திரங்களை மழைக்காலத்தில் பயன்படுத்த ஏதுவாக தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீா்நிலைகளின் கரைகள் சேதம் அடையும் போது தடுப்பு நடவடிக்கையாக போதுமான அளவு மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மழைநீா் தேங்கா வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சித் துறை, பேரூராட்சிகள் துறை, வருவாய்த் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க வேண்டும்: வாலிபா் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்ட... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

புயல் காரணமாக பெய்துவரும் தொடா் மழையினால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலினால் தொடா்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அரு... மேலும் பார்க்க

எம்.சாண்ட் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: கட்டடத் தொழிலாளா் சங்கம்

தமிழகத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் மணலின் விலை உயா்வை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் கோவை ... மேலும் பார்க்க

தருமபுரியில் இடைவிடாது பெய்த மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மாவட்டத்தில் 213.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக லேசானது ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் காலை முதலே... மேலும் பார்க்க

உதயநிதி பிறந்த நாள் விழாவில் இலவசப் பொருள்களை பெற முண்டியடித்த பொது மக்கள்

பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் இலவச சேலை, போா்வை, உணவு பொருள்களை பெறுவதற்காக பொதுமக்கள் மேடையை நோக்கி முண்டியடித்து சென்ால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியா... மேலும் பார்க்க