செய்திகள் :

தலித்களுக்கு எதிரான வன்முறை: 101 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

கா்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி தாலுகாவில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த ஜாதிய வன்முறை வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தீா்ப்பளித்தது.

முடிதிருத்தம் கடை மற்றும் உணவகங்களுக்குள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் மோதல் வெடித்தது. இச்சம்பவம் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதலின்போது குற்றம் சாட்டப்பட்டவா்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடியிருப்புகளுக்கு தீ வைத்தனா்.

இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட 117 பேரில் 16 போ் உயிரிழந்தனா். அண்மையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மீதமுள்ள 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க