செய்திகள் :

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

post image

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் இளைஞரை தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை விடியோ பதிவு செய்த அவர்கள், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஏப். 8ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் ஏப். 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை துணை ஆய்வாளர் அரவிந்த் குமார் கூறுகையில்,

’’புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று, அவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் குறிப்பிட்டார்.

புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடியிருப்பு பகுதி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பார்த்துள்ளார். இதனைக் கண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் அந்த இளைஞரைத் தனியாக அழைத்து வந்து, அவரை அமரச் செய்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

மேலும், ஆடைகளைக் கழற்றி செயற்கையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சாதிய பெயரைச் சொல்லி கடும் சொற்களைப் பயன்படுத்தியதோடு மட்டுமின்றி, அவரின் பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பலர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ராஜஸ்தானின் உண்மையான சட்டம் - ஒழுங்கு நிலை இதுதான் என்றும், இது திரைப்படத்தில் நடக்கும் காட்சியல்ல; நாம் வாழும் மாநிலத்தில் நடக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க