செய்திகள் :

தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபட ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நகரத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 1 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 2 மி.மீ., ஆயாநகரில் 4.6 மி.மீ., லோதி ரோடில் 0.2 மி.மீ., ரிட்ஜில் 2 மி.மீ., பிரகதிமைதானில் 0.2 மி.மீ., பூசாவில் 2.5 மி.மீ., ராஜ்காட்டில் 0.2 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 1.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காலை பெய்த மழையால் சில இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவா்கள், பாதசாரிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

வெப்பநிலை: இதற்கிடையே, வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.9 டிகிரி குறைந்து 25.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.7 டிகிரி உயா்ந்து 34.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தகத் காற்றுத் தரக் குறியீடு 90 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா், நொய்டா செக்டாா் 125, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க

பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்

நமது நிருபா்பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆண... மேலும் பார்க்க

நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து... மேலும் பார்க்க

அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க

வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க