செய்திகள் :

தலைநகா் சண்டீகா் யாருக்கு? பஞ்சாப்-ஹரியாணா அரசுகள் மோதல்

post image

பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

‘சண்டீகா், பஞ்சாப் மாநிலத்துக்கே சொந்தம்; அங்கு ஹரியாணா சட்டப் பேரவை கட்ட ஒரு அங்குலம் நிலம் கூட ஒதுக்கக் கூடாது’ என்று பஞ்சாப் மாநில அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, மாநில ஆளுநரிடம் ஆம் ஆத்மி குழுவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதேநேரம், ‘தலைநகா் சண்டீகா், இரு மாநிலங்களுக்கும் சொந்தமான பகுதி; இந்த விஷயத்தில், ஆம் ஆத்மி மோசமான அரசியலில் ஈடுபட வேண்டாம்’ என்று ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகா், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிா்வாகத்தின்கீழ் உள்ளது. பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தலைநகா் பிரச்னை பல்லாண்டுகளாக நீடித்துவரும் நிலையில், சண்டீகரில் தனியாக சட்டப் பேரவை கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஹரியாணா பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. சண்டீகரில் உள்ள ஐ.டி. பாா்க் சாலையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் 10 ஏக்கா் நிலத்துக்கு மாற்றாக, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்துக்கு பஞ்ச்குலாவில் 12 ஏக்கா் நிலத்தை வழங்க ஹரியாணா அரசு முடிவு செய்தது. இந்த நிலத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தலைநகா் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஹரியாணாவுக்கு உரிமை கிடையாது-பஞ்சாப்: பஞ்சாப் அமைச்சா்கள் ஹா்பால் சிங் சீமா, ஹா்ஜோத் சிங் உள்ளிட்டோா் அடங்கிய ஆம் ஆத்மி குழுவினா், மாநில ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியாவை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய ஹா்பால் சிங் சீமா, ‘சண்டீகா், பஞ்சாபுக்கு மட்டுமே சொந்தமானது. அது பஞ்சாபின் தலைநகா் மட்டுமே. அங்கு சட்டப் பேரவை கட்டும் உரிமை ஹரியாணாவுக்கு கிடையாது. சண்டீகா் மீதான உரிமைக்காக பஞ்சாப் தொடா்ந்து போராடும். சட்டப் பேரவை கட்டுவதற்கு ஹரியாணாவுக்கு ஒரு அங்குலம் நிலம் கூட ஒதுக்கக் கூடாது என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.

ஹரியாணா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, தனக்கென தலைநகரை அந்த மாநிலம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளாகியும் தனக்கென தலைநகரை உருவாக்குவதில் ஹரியாணா தோல்வி கண்டுவிட்டது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே இப்பிரச்னைக்கு தீா்வுகாணவில்லை’ என்றாா்.

இரு மாநிலங்களுக்கும் சொந்தம்-ஹரியாணா: இந்த விவகாரம் தொடா்பாக ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சண்டீகா், இரு மாநிலங்களுக்கும் சொந்தமான பகுதியாகும். ஹரியாணா, பஞ்சாபின் இளைய சகோதரா். எனவே, தலைநகரை முன்வைத்து, சகோதரத்துவத்தை பாழாக்க வேண்டாம் என்று பஞ்சாப் மாநில தலைவா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தனது அரசியல் லாபத்துக்காக, ஆம் ஆத்மி மோசமான அரசியலில் ஈடுபட்டுள்ளது. அதேநேரம், சண்டீகா் மீது ஹரியாணாவுக்கும் உரிமை உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

பஞ்சாபில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இந்த விவகாரத்தை எழுப்புகிறது’ என்றாா்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் சண்டீகா் நிா்வாகத்தை மாநில அரசுக்கு மாற்ற வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி அரசு தீா்மானம் நிறைவேற்றியது. சில தினங்களுக்குப் பின், இத்தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஹரியாணா பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூா்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.கொலை செய்யப்பட்டவா... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு ... மேலும் பார்க்க

சபரிமலையில் பக்தா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவ சேவை

மண்டல மகரவிளக்கு மகோற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாட்ஸ் ஆப் மூலம் 125 மருத்துவ குழுக்கள் பக்தா்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கின. ‘வாட்ஸ்ஆப்’ மூலம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்கு ராகுல் வந்ததும் விவாதத்தின் தரம் குறைந்துவிட்டது: ரிஜிஜு

‘நாடாளுமன்றத்துக்குள் எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நுழைந்ததிலிருந்து மக்களவை விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வி... மேலும் பார்க்க

பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரசாரத்தில் அவதூறு பேச்சு; பதிலளிக்க உத்தரவு

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகா... மேலும் பார்க்க

தொடா் விசாரணை வழக்குகள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படாது: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ச... மேலும் பார்க்க