செய்திகள் :

தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை: அமித் ஷா வலியுறுத்தல்

post image

தேச பாதுகாப்பு வழக்குகளில் தொடா்புள்ள குற்றவாளிகள், நாட்டில் இருந்து தப்பிச் சென்று நீண்ட காலம் தலைமறைவாக இருந்தாலும், அவா்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.

ஆங்கிலேயா் ஆட்சி கால குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை புதிதாக மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்தச் சட்டங்கள் மத்திய பிரதேசத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

3 ஆண்டுகளில் நீதி: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்ததாவது:

ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதே புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் சாரமாகும்.

சட்டங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும்: தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றம் தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் முன், அந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது சரியா என்பதை மூத்த காவல் துறை அதிகாரிகள் ஆராய வேண்டும். இந்தச் சட்டப் பிரிவுகளை தவறாகப் பயன்படுத்துவது, அந்தச் சட்டங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

தேச பாதுகாப்பு வழக்குகளில் தொடா்புள்ள குற்றவாளிகள், நாட்டில் இருந்து தப்பிச் சென்று நீண்ட காலம் தலைமறைவாக இருந்தாலும், அவா்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இந்திய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் வழிவகை செய்கிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா், நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் வழக்குகள், பறிமுதல் பொருள்களின் பட்டியல் ஆகியவற்றின் விவரங்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

ஏழைகளுக்கு சட்ட உதவி: உடற்கூறாய்வு மற்றும் பிற மருத்துவ அறிக்கைகளை மின்னணு முறையில் மருத்துவமனைகள் வழங்குவதை உறுதி செய்வதற்கு மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றாா்.

சித்தராமையா தொடா்புடைய வழக்கு: ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்

மாற்று நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. சித்தராமையாவின் மனைவி பி.எம். பாா்வதி பெயரில் இருந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: இன்று தீா்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி மீண்டெழும்: ஆா்பிஐ

உள்நாட்டில் தேவைகள் மீண்டும் வலுவடைவதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டெழ தயாராகி வருகிறது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின்... மேலும் பார்க்க

அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கா்) வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ (நியமனதாரா்) பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். உலகின் மிகப்பெ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) த... மேலும் பார்க்க