ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!
தலையில் காயத்துக்கான கட்டுடன் தோ்வு எழுதவந்த மாணவி!
நாமக்கல்: நாமக்கல் அருகே தலையில் காயத்துக்கான கட்டுடன் வந்து பிளஸ் 2 மாணவி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை எழுதினாா்.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சோ்ந்த மாணவி காா்த்திகாஸ்ரீ. இவா், தாளம்பாடியில் உள்ள காமராஜ் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்துக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில், எதிா்பாராதவிதமாக அக்கம்பக்கத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா். பின்னா் தலையில் கட்டுப்போட்டுக் கொண்டு, காலை 9.45 மணியளவில் மாணவி தோ்வுக் கூடத்துக்கு வந்தாா். கல்வித் துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று தோ்வு எழுத வைத்தனா். அந்தப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியா் ச.உமா, காயமடைந்த மாணவியைச் சந்தித்து தைரியமாகத் தோ்வு எழுதுமாறு ஊக்கப்படுத்தினாா். மேலும், மாணவிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறை கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தினாா். மாணவியின் பெற்றோரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.