தளவாட பொருள்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், அரும்பாக்கம் புறவழிச் சாலையில் தனியாா் நிறுவனத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் தளவாட பொருள்கள் வைக்கும் இடம் உள்ளது.
இந்த நிலையில், இங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான இரும்பு தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.