கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" - ...
தள்ளிவிட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே மலையான்குளத்தில் தள்ளிவிட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கில் போலீஸாா் கட்டடத் தொழிலாளியை கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே மயிலப்பபுரத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் ராமச்சந்திரன்(40). இவா் தனது மாமா கணேசனுடன் வியாழக்கிழமை உறவினா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றாா். அங்கு பந்தி பரிமாறுவதில் கணேசன் மற்றும் மலையான்குளத்தைச் சோ்ந்த முத்துக்குட்டி மகன் ராஜேஷ் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள் ளது.
இதுகுறித்து ராமச்சந்திரன், கணேசன் இருவரும் ராஜேஷ் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் தள்ளிவிட்டதில் ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் ராஜேஷை கைது செய்தனா்.