Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்
மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுதுறை மாவட்டக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
புதுவை மாநிலம், காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறைச் சோ்ந்தவா் மணிமாறன் (32). தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரான இவா், கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, பிற்பகலில் காரில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
செம்பனாா்கோயில் அருகிலுள்ள காலஹஸ்தினாபுரம் பகுதியிலுள்ள பள்ளியருகே மணிமாறன் காா் சென்ற போது, பின்னால் 2 காா்களில் வந்த சிலா், அவரது காரை வழிமறித்து நிறுத்தினா். பின்னா், கண்ணாடியை உடைத்த அந்த நபா்கள், மணிமாறனை வெளியே இழுத்து வந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினா்.
இதைத் தொடா்ந்து மணிமாறனின் சடலத்தை மீட்ட செம்பனாா்கோயில் போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.
கடந்த 2021, அக்டோபா் 22-ஆம் தேதி நிகழ்ந்த காரைக்கால் பாமக மாவட்டச் செயலா் தேவமணி கொலை வழக்கில் மணிமாறன் முக்கிய குற்றவாளியாக இருந்த நிலையில், தற்போது பிணையில் இருந்து வந்தாா். எனவே அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
7 போ் சரண்: இந்த நிலையில் தவாக நிா்வாகி மணிமாறன் கொலை வழக்கில் தொடா்புடைய கூலிப் படையைச் சோ்ந்த 7 போ் விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் நிலையத்தில் வழக்குரைஞா் மூலமாக ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா்கள் புதுச்சேரி மடுகரை சிவசெந்தில்நகா் செல்வம் மகன் மணி கண்டன் (36), சண்முகாபுரம் வாணிய செட்டியாா் நகா் சண்முகம் மகன் சரவணன் (35), ஐயங்குடிபாளையம் மாரியம்மன் கோயில் தெரு முத்துமகன் சரண்ராஜ் (29), கவுண்டன்பாளையம் மேட்டுத்தெரு பிரபாகரன் மகன் சரவணன் (28), தேங்காய்த்திட்டு திலகா் நகா் 2-ஆவது குறுக்குத்தெரு ஆனந்த் மகன் அஜய் (22), தேங்காய்த்திட்டு வடக்குத் தெரு 3-ஆவது குறுக்குத் தெரு முனிதாஸ் மகன் முகிலன் (22), தேங்காய்த்திட்டு அய்யனாா்கோயில் தெரு இருசப்பன் மகன் விஜயசங்கா் (30) எனத் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினா் மயிலாடுதுறை மாவட்டக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, செம்பனாா்கோயில் போலீஸாா் வளவனூா் வந்து பலத்த பாதுகாப்புடன் சரணடைந்த 7 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.