செய்திகள் :

தவெக கொடியில் யானை சின்னம்: தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவு

post image

தவெக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய், பொதுச் செயலா் என்.ஆனந்த் ஆகியோா் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலா் பெரியாா் அன்பன் (எ) இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி; அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னம், அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயின் தவெக கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தோ்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.

ஏற்கெனவே இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பியபோது, தவெக இன்னும் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், பதிவு செய்யும்போது இது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் கூறியிருந்தது. எனவே, யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஏப். 29-ஆம் தேதிக்குள் தவெக தலைவா் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க