ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் இன்று தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களால் பாரபத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் திணறி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு வந்தவர்களும், இருசக்கர மற்றும் வாகனங்களில் வந்தவர்களும் சாலைகளில் அணிவகுத்துச் செல்கிறார்கள்.
போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்துக் காவலர்கள் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். ஒரு சில பகுதிகள் வாகனங்கள் வெளியேற மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு வழி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் இன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்த போதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால், மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது.
விஜய் மேடைக்கு 3 மணிக்கு வந்தார். நடைமேடையில் நடந்து சென்று ரசிகர்களை அருகில் சந்தித்து கையசைத்தார். பிறகு விழா தொடங்கியது. விஜய் குரலில் கொள்கைப் பாடல் இசைக்கப்பட்டது. பிறகு முக்கியத் தலைவர்கள் பேசினர். சரியாக 5 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.
முந்தைய மாநாட்டைக் காட்டிலும் இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு சற்று மெருகேறியிருந்தது. ஒரு நடிகரைப் போல கடந்த மாநாட்டில் பேசியிருந்தார். ஆனால் இந்த முறை தவெக தலைவராக, அரசியலையும் அரசியல் தலைவர்களையும் விஜய் தன்னுடைய பாணியில் விமர்சித்திருந்தார்.
ஆங்காங்கே, எம்ஜிஆர், ஜெயலலிதா போல பேசி கேள்விகளைக் கேட்டு மக்களை பதில் சொல்ல வைத்தார். வழக்கம் போல ஒரு குட்டிக்கதையும் சொன்னார்.
மத்தியில் ஆளும் பாஜக கொள்கை எதிரி என்றும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசியல் எதிரி என்றும், வரும் 2026 தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயதான் எனவும் அறிவித்தார்.
சரியாக 30 நிமிடம் உரையாற்றிய விஜய் மக்களை நேரடியாக சந்திக்கவிருப்பதாகக் கூறி உரையை நிறைவு செய்தார். பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது.
விழா நிறைவு பெற்ற நிலையில், திடலில் இருந்து மக்கள் மெல்ல வெளியேறி வருகிறார்கள்.